Pages

கஞ்சா கருப்புவிடம் குவியும் மனுக்கள்_cinemaglitz

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல் முருகன் போர்வெல் படத்தை தயாரித்து வருகிறார். அதில் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். அங்காடி தெரு மகேஷ், ஆருஷி ஹீரோ ஹீரோயின்கள். மலையன் படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார்.




காரைக்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக கருப்பு 20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரி வாங்கி இருக்கிறார்.  எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு அந்த லாரியைக் கொண்டு போர்வெல் போட்டுக் கொடுக்கிறார். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்துள்ளார். இன்னும் போர்வெல் போடச்சொல்லி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கருப்புவுக்கு வந்திருக்கிறதாம். "ஷூட்டிங் முடியும் முன் எல்லா ஊருக்கும் போர்வெல் போட்டுத்தாரேன்"னு பிராமிஸ் பண்ணியிருக்காராம் கருப்பு.