Pages

ரஜினி ஆல்பத்தில் நடனமாடும் ஷாருக்கான்-தீபிகா படுகோனே

ராப் பாடகர் ஹனி சிங், பாலிவுட் தயாரிப்பாளர் புஷன்குமார் ஆகியோர் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்குகின்றனர். ‘தலைவர்’ என்று பெயரிடப்படுள்ள இந்த இசை ஆல்பத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் நடனமாடுகின்றனர்.




இதுகுறித்து ஷாருக்கான் கூறுகையில், ரஜினிக்கு எல்லோருமே ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அவருக்காக உருவாகும் ‘தலைவர்’ என்ற இந்த இசை ஆல்பத்தில் நடனமாட என்னிடம் கேட்டனர். அவருடைய தீவிர ரசிகன் என்ற முறையில் என்னுடைய பங்கும் இந்த ஆல்பத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக உடனடியாக ஒப்புக் கொண்டேன். மேலும், இந்த ஆல்பத்தில் தீபிகா படுகோனேவும் ஆடினால் நன்றாக இருக்கும் என எண்ணி அவரிடம் கேட்டேன். அவரும் ரஜினியின் தீவிர ரசிகை என்பதால் உடனே ஒப்புக்கொண்டார். ரஜினி ஸ்டைலில், ஜாலியான ஆல்பமாக இது இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த இசை ஆல்பத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் லுங்கி கட்டிக் கொண்டு நடனமாடியுள்ளனர். இந்த ஆல்பத்திற்கு சின்னி பிரகாஷ் நடனம் அமைத்துள்ளார். தீபிகா படுகோனே, தமிழில் ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.