மாதவனும் மலர்விழியும் என்ற படம் பரதநாட்டியத்தை கருவாக கொண்டு தயாராகி வருகிறது. மாதவனும், மலர்விழியும் பரதநாட்டிய கலைஞர்கள். காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். தனியா விடப்பட்ட மலர்விழி படும் கஷ்டங்களும். இருவரும் பிறகு எப்படி சேர்கிறார்கள் என்பதும் படத்தோட கதை.
படத்தின் ஒரு பாடல் காட்சி ஊட்டி புல்மேட்டில் எடுக்கப்பட்டது. கதாநாயகி சிஜா ரோஜ் முறையாக பரதநாட்டியம் கற்றவர். நான்குநாள் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடினார். பரதநாட்டியத்தின் அத்தனை அசைவுகளும் ஒரே பாடலில் வருகிறதாம். அவை அத்தனையும் ஆடி முடித்தாராம். ஹீரோவாக அஸ்வின் என்ற நியூபேஸ் நடிக்கிறார். பொன்னம்பலம் வில்லன். மாசில் என்பவர் இயக்குகிறார்.